Saturday 18 March 2017

Loans For Business Start ups

முத்ரா கடன் திட்டம் பற்றிய முழு விபரம்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்                              (Micro Small Medium Enterprises) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான்   இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri Mudra Yojana) . இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும்மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது.
  • முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது மத்திய அரசின் ஒரு திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
  • இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இதனை மத்திய நிதிஅமைச்சர் 2015-16  நிதியாண்டில் வெளியிட்டார்.
  • தனியார்குருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான  நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில்சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன்  வழங்கியுள்ளனர்.

இத்திட்டத்தின்சேவைகள்:

குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலைமேம்படுத்தவும்
விரிவு படுத்தி கொள்ளவும் இந்த முத்ரா யோஜனாதிட்டம் சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய மூன்று வகைகளில்கடன்களை வழங்குகிறது.

சிசு (SHISHU)

இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.

கிஷோர் (KISHOR)

இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன்பெறலாம்.

தருண்(TARUN)

இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன்பெறலாம்