Wednesday 15 March 2017

Subsidy Given Sectors By Govenrment

அரசு மானியம் வழங்கப்படும் தொழில்கள் :
கீழ் உள்ள தொழில்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் 

1)மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
2)மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
3)தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
4)வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
5)மருந்துப் பொருட்கள் உற்பத்தி
6)சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
7)ஏற்றுமதி ஆபரணங்கள்
8)மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
9)விளையாட்டுப் பொருட்கள்
10)சிக்கன கட்டுமானப் பொருட்கள்
11)ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்


அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.